உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீராம்பட்டினம் கோவிலில் நாளை  கொடியேற்றம்

வீராம்பட்டினம் கோவிலில் நாளை  கொடியேற்றம்

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் நாளை கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.வீராம்பட்டினத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் 5வது வெள்ளிக்கிழமையன்று தேரோட்டம் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, தேரோட்டம் விழா வரும் 16ம் தேதி நடக்கிறது.அதையொட்டி, நாளை 8ம் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்டம் விழாவை தொடர்ந்து, வரும் 17ம் தேதி தெப்ப உற்சவம், 23ம் தேதி முத்துப்பல்லக்கு வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை