உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் மாஜி முதல்வர்   நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும் மாஜி முதல்வர்   நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரி, : புதுச்சேரியில் காங்., தலைமையில், காங்., மாடல் ஆட்சியை நாம் அனைவரும் இணைந்து அமைக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார். புதுச்சேரி சுதேசி மில் அருகில், காங்., சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: பா.ஜ., கூட்டணியில் உள்ள கட்சிகளே, ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவு தருகின்றன. இதனால் பிரதமர் மோடி நெருக்கடியில் இருக்கிறார். முதல்வர் ரங்கசாமி, இண்டியா கூட்டணி எம்.பி.,க்களிடம் பேசி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்குவோம் என்கிறார். அப்படி எனில், அவருக்கு பா.ஜ.,கூட்டணியில் நம்பிக்கை இல்லை. இது அவர் எந்தளவிற்கு பலவீனமாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி, இதுவரை ஒரு தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. லோக்பசா தேர்தலில் அந்த கூட்டணி தோல்வி அடைந்ததற்கு அது தான் முக்கிய காரணம். இந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவரே, இந்த ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை அடுக்குகிறார். ஒரு அமைச்சர், பினாமி பெயரில், 5 வீடுகளை வாங்கி இருக்கிறார். இதை எல்லாம் களைய, நாம் அனைவரும் இணைந்து, புதுச்சேரியில் காங்., மாடல் ஆட்சி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை