உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் எம்.எல்.ஏ., தி.மு.க.,வில் ஐக்கியம்

முன்னாள் எம்.எல்.ஏ., தி.மு.க.,வில் ஐக்கியம்

புதுச்சேரி: முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் ஏற்கனவே தி.மு.க.,வில் இணைந்து செயல்பட்டு வருகிறார். முத்தியால்பேட்டை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், புதுச்சேரிக்கு நேற்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் நேற்று முறைப்படி இணைந்தார். தமிழக அமைச்சர்கள் பொன்முடி, பன்னீர்செல்வம், கணேசன் புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவா, காரைக்கால் அமைப்பாளர் நாஜிம், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், அவைத் தலைவர் எஸ்.பி.சிவகுமார், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ