உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரசு பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் சேத்திலால் உயர்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மணவெளி தொகுதி ராமு எம்.எல்.ஏ., பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளியில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராமு எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கலைவாணி முன்னிலை வகித்தார். புதுச்சேரி ஜோதி கண் மருத்துவமனை டாக்டர் சூர்யா மற்றும் டெக்னீஷியன்கள் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ