மேலும் செய்திகள்
செடல் திருவிழா
31-Aug-2024
புதுச்சேரி : கரையாம்புத்துார் அடுத்த வீராணம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8.00 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபி ேஷகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 3 மணிக்கு அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 4 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது.இதில் பக்தர்கள் தேர், டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்களை முதுகில் அலகு குத்தி இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
31-Aug-2024