மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
புதுச்சேரி, : புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராய, கள்ளுக்கடை ஏலத்திற்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார். வரும் 29ம் தேதி மின்னணு முறையில் இந்த ஏலம் நடக்கிறது.புதுச்சேரி மாநிலத்தில் 110 சாராயக்கடைகள், 92 கள்ளுக்கடைகள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சாராயக்கடை, கள்ளுக்கடைகளுக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி முதலாம் ஆண்டு எடுக்கப்படும், சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் கூடுதலாக 5 சதவீதம் கிஸ்தி தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.இதேபோல் அதற்கு அடுத்த ஆண்டுகளில் மேலும் 5 சதவீதம் கூடுதல் கிஸ்தி தொகையும் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.இந்த புதுப்பிப்பு கிஸ்தி தொகை செலுத்தாவிட்டால் மறு ஏலம் விடப்படும். அதன்படி, கிஸ்தி தொகை செலுத்தாத அனைத்து சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளுக்கு ஜூலை மாதத்தில் மறு ஏலம் விட அனுமதி கேட்டு, கலால் துறை மூலம் கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்த கோப்பிற்கு அனுமதி தராத கவர்னர், பல்வேறு கேள்விகளை எழுப்பி திருப்பி அனுப்பினார்.இந்நிலையில், கவர்னர் ராதாகிருஷ்ணனை, முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசிய நிலையில் தற்போது புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக்கடை, கள்ளுக்கடைகளுக்கு வரும் 29ம் தேதி ஏலம் விட கவர்னர் அனுமதி அளித்துள்ளார். calalauction.py.gov.in. என்ற இணையதளத்தில் மின்னணு முறையில், இந்த ஏலம் நடக்கின்றது.அன்றைய தினம் காலை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை சாராயக்கடைகளுக்கும், மாலை 3 மணி முதல் 4 மணி வரை கள்ளுக்கடைகளுக்கும் ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago