உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆறுபடை வீடு கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

ஆறுபடை வீடு கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

பாகூர்: கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவ கல்லுாரியில், பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது.விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் நிர்வாக இயக்குநர் விகாஸ் பாட்யா பங்கேற்கிறார். கல்லுாரி முதல்வர் ராஜேஷ் சேகல் ஆண்டறிக்கை வாசிக்கிறார்.விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் துணை தலைவர் அனுராதா கணேசன், சிறந்த மருத்துவ பட்டதாரி மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளார். நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார். விழாவில், 10 பேருக்கு முதுகலை மருத்துவ பட்டமும், 112 பேருக்கு இளங்கலை மருத்துவ பட்டமும், அதிக மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு பதக்கமும் வழங்கப்படும் என, விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ