மேலும் செய்திகள்
வேளாங்கண்ணி பக்தர்களுக்கு உதவி
26-Aug-2024
பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கல்
25-Aug-2024
புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியில், வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.வேளாங்கண்ணி, அன்னை மாதா கோவில் கொடியேற்றம் வரும், 29ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், பாதயாத்திரையாக கோவிலுக்கு நடந்து செல்கின்றனர்.இந்நிலையில், அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் நாராயணகுமார் தலைமையில், பாத யாத்திரை செல்பவர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பிரபு, பொருளாளர் ராபர்ட் கென்னடி, பொறுப்பாளர்கள் சுகுமாரன், டேவிட் ஜோசப், முருகானந்தம், சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Aug-2024
25-Aug-2024