உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராமங்களில் சுகாதார திருவிழா நடத்தப்படும்; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

கிராமங்களில் சுகாதார திருவிழா நடத்தப்படும்; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: முதல்வராக இருந்து அனுமதி கொடுத்தும், செவிலியர் பணி நியமன கோப்பு சுற்றி விடப்படுகிறது என முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார்.கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்த சுகாதார திருவிழாவில் அவர், பேசியதாவது;புதுச்சேரியில் எளிதான மருத்துவ வசதி உள்ளது. மற்ற மாநிலத்தில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. புதுச்சேரியில் 4 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மருத்துவ குறியீட்டில் முதன்மை நிலையில் உள்ளோம்.சென்னைக்கு செல்லாமல் புதுச்சேரியில் சிறப்பு மருத்துவ வசதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். புதுச்சேரியிலே அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று, மூட்டு மாற்று சிகிச்சையில் சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். 70 வயது மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெற மருத்துவ காப்பீடு திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.வீடு வீடாக சென்று இருதய பரிசோதனை செய்யப்படுகிறது. தெருக்களை சுத்தமாக வைத்திருக்கவும், கொசு தொல்லை இல்லாமல் இருக்க உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.நிர்வாகத்தில் நமக்கு சில சங்கடங்கள் குறை உள்ளது. 500 செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில், 140 பேர் பணியாற்றுகின்றனர். இதனால் செவிலியர்கள் அழுகிறார்கள். இது தொடர்பான கோப்பில் தேவையில்லாத கேள்வி கேட்கின்றனர்.துறை அமைச்சராக இருந்து சொல்கிறேன் என்றால் எனக்கு எவ்வளவு சங்கடம் இருக்கும். முதல்வராக இருக்கும் நானே அனுமதி கொடுக்கும்போது, நிர்வாகத்தில் ஏன் இது பெரிய குறையாக உள்ளது என தெரியவில்லை. அடுத்த ஆண்டு மடுகரை, நெட்டபாக்கம், கரிக்கலாம்பாக்கம் போன்ற கிராமங்களில் சுகாதார திருவிழா நடத்தப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ