ரூ.10 லட்சத்தில் ஹைமாஸ் விளக்குகள் இயக்கி வைப்பு
அரியாங்குப்பம்; பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்.பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பு அருகே, ஹைமாஸ் விளக்குகள் பழுதாகி எரியாமல் இருந்தது. அதனால், அப்பகுதி் இரவு நேரங்களில் இருளாக இருந்தது. தற்போது அங்குள்ள கோவிலில், மயான கொள்ளை திருவிழா நடக்க உள்ளது.இதனால், சபாநாயகர் செல்வம் முயற்சியில்,ரூ.10 லட்சம் மதிப்பில், பழுதான ஹைமாஸ் விளக்குகள் பொதுப்பணித்துறை மூலம் சீரமைத்தனர். புதுப்பிக்கப்பட்ட ஹைமாஸ் விளக்குகளை, சபாநாயகர் செல்வம் நேற்று இயக்கி வைத்தார். கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.