பெண் தொழிலாளர்கள் கவுரவிப்பு
புதுச்சேரி : சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், துப்புரவு பெண் தொழிலாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.புதுச்சேரி கடற்கரை சாலை நேரு சிலை அருகில், சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரியை துாய்மையாக வைத்திருக்கும் துப்புரவு பெண் தொழிலாளர்கள் 150 பேருக்கு, மகளிர் தின வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.லயன்ஸ் ரவி, குளங்கள் காப்போம் அமைப்பு கார்த்திகேயன், ரேவதி, பெல்ஜியம் நாட்டை சார்ந்த பென்னர்ட், ஷென்னோ கலந்து கொண்டனர்.