உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தையுடன் மனைவி மாயம் கணவர் புகார்

குழந்தையுடன் மனைவி மாயம் கணவர் புகார்

 : புதுச்சேரி: வீட்டில் குழந்தையுடன் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.  புதுச்சேரி அண்ணா நகர்,11வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபு மனைவி பிரியதர்ஷினி, 28; இவர் தனது ஒரு வயது மகனுடன் வீட்டில் இருந்தார். கடந்த 17ம் தேதி இவரது கணவர் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி அவருடன் இருந்த குழந்தையும் காணவில்லை.  உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் பிரபுவின்  புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன இருவரையும் தேடிவருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை