மேலும் செய்திகள்
14 தாசில்தார்கள் இடமாற்றம்
28-Aug-2024
புதுச்சேரி: ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேசன் மீண்டும் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் 33 ஐ.ஏ.எஸ்., 45 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுந்தரேசன் அருணாசல பிரதேசத்தில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர், ஏற்கனவே புதுச்சேரியில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் புதுச்சேரியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.இதேபோல், புதுச்சேரி ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுவாதி சிங், மனீஷ் ஆகியோர் அருணாசல பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக டில்லியில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி சத்தியசுந்தரம் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இதற்கான உத்த ரவை சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.
28-Aug-2024