உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு போலீசாருக்கு ஐ.ஜி., ஆலோசனை

ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு போலீசாருக்கு ஐ.ஜி., ஆலோசனை

புதுச்சேரி, : ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் போலீசாருக்கு ஐ.ஜி. அஜித்குமார் சிங்லா ஆலோனை வழங்கினார். புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று 4ம் தேதி நடக்கிறது. லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னி கல்லுாரி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை பணியில் 850 போலீசார் ஈடுப்படுகின்றனர்.ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுப்படும் போலீசாருக்கு வழிமுறைகள் கூறும் ஆலோசனை கூட்டம், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி கருத்தரங்கு அறையில் நடந்தது. போலீஸ் ஐ.ஜி. அஜித்குமார்சிங்லா தலைமை தாங்கினார்.சீனியர் எஸ்.பி.க்கள் நாரா சைதன்யா, கலைவாணன், சுவாதிசிங் மற்றும் எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் செய்ய கூடிய மற்றும் செய்ய கூடாதவை குறித்து போலீசாருக்கு விளக்கப்பட்டது. சமூகமான முறையில் ஓட்டு எண்ணிக்கை நடக்க பாதுகாப்பு பணியை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை