உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

ஆச்சாரியா பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

புதுச்சேரி,: ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரியில் நடந்த, முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.வில்லியனுார், ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் முதலாம் ஆண்டு துறைத்தலைவர் சியாமளா கவுரி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் குருலிங்கம், மாணவர்களின் எதிர்கால நலனுக்கான பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக ஈட்டன் பவர் குவாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவன மனித வள தலைமை அதிகாரி ஜெயக்குமார் ஆன்டனி கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடர்பு திறன் மற்றும் தொழில்துறை திறன் தொடர்பான ஆலோசனைகளை கூறினார்.இதைத்தொடர்ந்து அனைத்து துறை தலைவர்களும், துறை சார்ந்த சிறப்பு குறித்து பேசினர். இதையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மேற் கொண்டனர்.சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி