உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஐ.டி.,யில் 2 நாள் கருத்தரங்கம் துவக்கம்

என்.ஐ.டி.,யில் 2 நாள் கருத்தரங்கம் துவக்கம்

காரைக்கால்: காரைக்கால் என்.ஐ.டி., கழகத்தில் இரண்டு நாள் அகில இந்திய கருத்தரங்கம் துவங்கியது.காரைக்கால் திருவேட்டக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் உடற்கல்வித்துறை சார்பில் இரண்டு நாள் அகில இந்திய இன்டர் என்.ஐ.டி., அட்டவணை கருத்தரங்கின் துவக்க விழா நேற்று கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இக்கருத்தரங்கை கழகத்தின் இயக்குனர் முனைவர் மகரந்த் மாதவ் காங்ரேகர் துவக்கி வைத்தார்.கழகத்தின் பதிவாளர் சுந்தரவரதன் முன்னிலை வைத்தார். கருத்தரங்கில் வெளி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 31தேசிய தொழில்நுட்பக்கழங்களில், 15 தேசிய தொழில் நுட்பக்கழங்களைச் சேர்ந்த விளையாட்டு அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்கள் தங்கள் தடகள வீரம் மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் அகில இந்திய இன்டர் என்.ஐ.டி.,போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வரும் 2024--25ம் கல்வியாண்டிற்கான அகில இந்திய இன்டர் என்.ஐ.டி.,போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், அட்டவணை தயார் செய்தல் மற்றும் அதனைச் சார்ந்த நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை