மேலும் செய்திகள்
எஸ்.எம்.வி. பள்ளியில் ஆடை அலங்கார போட்டி
16-Aug-2024
புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிக மேலாண்மை துறை சார்பில், பேரவை துவக்க விழா நடந்தது.விழாவில், துறையில் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் மனித வளம்', 'சந்தைப்படுத்தல்', 'நிதி' மற்றும் 'பெருநிறுவன மேலாண்மை' என நான்கு பேரவைகள் உருவாக்கப்பட்டுள்ளன.மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக புதுச்சேரி, கேங்கஸ் இன்டர்நேஷ்னல் அமைப்பின் துணை பொதுமேலாளர் ராஜா கலந்து கொண்டு 'மனித வளம்', 'சந்தைப்படுத்தல்' நிதி மற்றும் பெரு நிறுவன மேலாண்மை என நான்கு பேரவைகளைத் திறந்து வைத்து, மாணவர்கள் நேர்மையோடு, ஆற்றல் மிக்க தலைவர்களாக உருவாக வேண்டும். வணிக மேலாண்மை துறையில் பரந்த அளவிலான நிபுணத்துவம் பெற வேண்டும் என்றார். மேலாண்மை துறை மாணவர்கள், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வணிக மேலாண்மை துறைத்தலைவர் பால செந்தில் குமார் செய்திருந்தார்.
16-Aug-2024