உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவித் தொகை ஆணை வழங்கல்

திருமண உதவித் தொகை ஆணை வழங்கல்

அரியாங்குப்பம், : ஆதிதிராவிட பெண்களுக்கு திருமண உதவித்தொகைக்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார்.புதுச்சேரியில், ஆதிதிராவிட பெண்களுக்கு திருமண உதவித் தொகை, ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரியாங்குப்பம் தொகுதி பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.அதில், 9 பேருக்கு தலா 1 லட்சம் வீதம் மொத்தம் 9 லட்சத்திற்கான ஆணையை பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி