உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதார ஆய்வாளர் வீட்டில் பட்டப்பகலில் நகை திருட்டு

சுகாதார ஆய்வாளர் வீட்டில் பட்டப்பகலில் நகை திருட்டு

திட்டக்குடி : பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.திட்டக்குடி வதிஷ்டபுரம் ரெங்கு நகரை சேர்ந்தவர் சங்கர்,41. தொழுதுார் அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகவும், அவரது மனைவி தபிதாஞானம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்த வருகின்றனர்.இருவரும் நேற்று காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்ட, வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றனர். மதியம் 2:00 மணிக்கு சங்கர், வீட்டிற்கு சென்று சாப்பிட சென்றபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நான்கரை சவரன் நகைகள் திருடு போயிருந்தது.புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி