உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு மூடல் நோயாளிகள் ஏமாற்றம்

ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு மூடல் நோயாளிகள் ஏமாற்றம்

புதுச்சேரி: ஹோலி பண்டிகை முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு நேற்று மூடப்பட்டதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாடு முழுதும் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது எனவும், நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வழக்கம் போல், நேற்று வந்தனர். அப்போது, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டு இருப்பதை கண்ட நோயாளிகள் சிகிச்சை பெறமால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதற்கிடையே, ஜிப்மர் நுழைவு வாயில் அருகே பணியில் இருந்த பாதுகாவலர்கள் ஒலி பெருக்கி மூலம் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என, அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை