மாசி மக திருவிழாவில் காங்., அன்னதானம்
புதுச்சேரி: புதுச்சேரி, வைத்திக்குப்பம் 123ம் ஆண்டு மாசி மக திருவிழாவை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதி காங்., பிரமுகர் குமரன் தலைமையில் பக்தர்களுக்கு தொகுதியின் ஏழு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இதில், காங்., முக்கிய பிரமுகர்கள் மோகன்தாஸ், ராஜாராம், வேல்முருகன், ராஜ்மோகன், பிரதீஷ், காங்கேயன், சார்லஸ், நர்ளா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.ஏற்பாடுகளை ராஜ்பவன் தொகுதி சார்ந்த முரளி, மோகனசுந்தரம், வசந்த்குமார், தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.