மேலும் செய்திகள்
தேசிய அறிவியல் தின விழா கொண்டாட்டம்
01-Mar-2025
புதுச்சேரி: காரைக்கால் அரசு கல்லுாரிகளின் மாணவர்கள் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் நவீன ஆய்வகங்களை பார்வையிட்டனர்.காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் இணைந்து, கல்லுாரி முதல்வர் சந்தானசாமி வழிகாட்டுதலின்படி, மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பெங்களூரு, இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஓபன் டே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ்குமார் வரவேற்று, தனது ஆய்வகத்தில் உள்ள ஜெர்மனி நாட்டின் புருக்கெர் கார்ப்பரேஷனின் நவீன உயர் ஆராய்ச்சி கருவிகளின் அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மாணவர்கள் விண்வெளி பொறியியல், வளி மண்டல அறிவியல், கடல்சார் அறிவியல், கிரையோஜெனிக் டெக்னாலஜி, புவி அறிவியல், வானியல் மற்றும் வானியற்வியல் உள்ளிட்ட பல்வேற பொறியியல் துறைகளின் நவீன ஆய்வகங்களை பார்வையிட்டனர். இதில், பேராசிரியர்கள் விமலன், ராஜபாலன், ஆய்வக பயிற்சியாளர் புனிதவதி, சிவசிதம்பரம், சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
01-Mar-2025