உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுநீரக தின மருத்துவ கருத்தரங்கு 

சிறுநீரக தின மருத்துவ கருத்தரங்கு 

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்தில் உலக சிறுநீரக தினத்தையொட்டி தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கிற்கு, சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர் அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்வு அதிகாரி ரவி, சிறுநீரகவியல் துறைத் தலைவர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜிப்மர், சிறுநீரகவியல் துறைத் தலைவர் ஸ்ரீராக் இறந்த நன்கொடையாளர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள சவால்கள் குறித்து பேசினார். அனைவரும் உறுப்பு தானம் மேற்கொள்ள வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கருத்தரங்கில், கடந்த ஆண்டு இறந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர் கவுரவிக்கப் பட்டனர். இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை