| ADDED : மே 28, 2024 03:34 AM
வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, மர்ம நபர் போலீசாரை கண்டு ஓடினர்.சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தவளக்குப்பம், நல்லவாடு, சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(எ) பாட்டில் மணி,19; என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது கத்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்தனர்.பின்னர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இரவு நேரத்தில் வேலை முடித்துவிட்டு கோர்க்காடு ஏரிக்கரை வழியாக தனியாக செல்லுபவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்வதற்காக கத்தி வைத்திருந்தது தெரிந்தது. மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்த மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.