உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிலம்பம் போட்டியில் சாதித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் சாதித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

புதுச்சேரி: சிலம்பம் போட்டியில் சாதித்த அரசு துவக்க பள்ளி மாணவி ஹேமலோஷினியை பள்ளி கல்வி துறை இயக்குனர் பிரியதர்ஷினி பாராட்டினார். அன்மையில் வேளாங்கண்ணி மற்றும் கடலுார் தேசிய அளவிலான ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில், காரைக்கால், திண்டுக்கல், திருச்சி, சென்னை, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியில் கலந்து கொண்டனர். இதில், புதுச்சேரியை சேர்ந்த காட்டேரிக்குப்பம் அரசு துவக்கப்பள்ளி பள்ளி மாணவி ஹேமலோஷினி, வேளாங்கண்ணி போட்டியில் முதல் இடம் பிடித்தார். அதைப்போலவே நேற்று கடலுாரில் தேசிய அளவில் நடந்த 9 வயது பிரிவு ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியிலும் முதல் இடம் பிடித்தார். இவர் காட்டேரிக்குப்பம் பள்ளியில் நடந்த சிலம்பம் பயிற்சியின் வழியாக இவ்விரு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.சாதித்த பள்ளி சிறுமி ஹேமலோஷினியை பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, முதன்மை கல்வி அதிகாரி மோகன் சால்வை அணிவித்து பாராட்டினர். பள்ளி தலைமையாசிரியர் சீனுவாசன், சிலம்பம் பயிற்சி அளித்த ஆசிரியர் சங்கர், முத்துக்குமரன், கலந்து கொண்டனர்.தொடர்ந்து, சிறுமிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. அதில், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, முத்தரசி, பானுப்பிரியா, லாவண்யா, ராஜேஸ்வரி, கலைச்செல்வி சார்பில் 1,500- ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. வட்டம்-5 ஆய்வாளர் சொக்கலிங்கம், சால்வை அணிவித்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை