உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / யோகா போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

யோகா போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி : புதுச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், மாநில அளவில் பள்ளிகளுக்கான யோகா போட்டி சங்கம் மையத்தில் நடந்தது.இதில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனம் ஆகிய பகுதியில் இருந்து எட்டு மண்டலம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அருள்ஜோதி யோகா மாணவர்கள் முதல் மூன்று பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா முதலியார்பேட்டை வள்ளலார் சபையில் நடந்தது.மையத்தின் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமமை தாங்கினார். புதுச்சேரி சன்மார்க்க தலைவர் கோதண்டபாணி, செயலாளர் ராமதாசு காந்தி, விஜயலட்சுமி, சுஜிதா, யோகா ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை