மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
2 hour(s) ago | 1
திருக்கனுார் : மணலிப்பட்டு விமல ஆஞ்சநேயர் கோவிலில், லட்ச தீபத்தை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டில் செண்பகவள்ளி, கனகவள்ளி தாயார் சமேத கொண்டதாசபெருமாள் கோவிலில், விமல ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலில், 23ம் ஆண்டு லட்ச தீப விழாவையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு அபிஷேகம், 12:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்ச தீபத்துடன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
2 hour(s) ago | 1