உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘நீட்’ வினாத்தாள் கசிவை கண்டித்து சட்ட கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

‘நீட்’ வினாத்தாள் கசிவை கண்டித்து சட்ட கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து சட்டக்கல்லுாரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வினாத்தாள் கசிவுக்கு நீதி வழங்க வேண்டும். டில்லியில் மாணவர்கள் போராட்டத்தில், தடியடி நடத்திய போலீசாரை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டக்கல்லுாரி, நான்காம் ஆண்டு மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லுாரி மாணவர் ரக் ஷன் தலைமையில் நடந்த போராட்டத்தில், மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதே போல், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  சி.ஐ.டி.யு., சார்பில், ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். மதிவாணன், மணவாளன், விஜயகுமார், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், மூத்த தொழிற்சங்க தலைவர் முருகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !