உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை திறக்கப்படும்

லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை திறக்கப்படும்

புதுச்சேரி : லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையில், எத்தனால், சர்க்கரை உற்பத்திக்காக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.பட்ஜெட்டில் கூட்டுறவு துறை குறித்து இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்: பால் உற்பத்தியை அதிகரித்திட தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்திற்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு 75 சதவீத மானியத்தில் தீவனம் வழங்க புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் வழங்க உத்தேசித்துள்ளது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவு குறையும்.நடப்பு நிதியாண்டில் பால் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பாண்லேவிற்கு 2.34 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். பால் அளவில் 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும்.லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையில் தனியார் பங்களிப்புடன் எத்தனால் மற்றும் சர்க்கரை உற்பத்திக்காக ஆலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து கூட்டுறவு அமைப்புகளை தன்னிறைவான அமைப்புகாக மாற்றிட முயற்சி எடுத்து வருகிறோம்.இதற்காக சில கூட்டுறவு சங்கங்களுக்கு முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட கடனில் 10 சதவீதம் அளவிற்கு வருவாய் ஈட்டும் சங்கங்களுக்கு கொடையாக மாற்றி வழங்கப்படும். இத்துறைக்கு 59.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை