மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அருகே உள்ள ஒதியம்பட்டு சுபாஷினி நகரை சேர்ந்த ஜெயபால்-வள்ளி தம்பதியர். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மூத்த மகள் அரியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் படித்து வருகிறார்.17 வயதுடைய இளைய மகள் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2, அறிவியல் பாடப் பிரிவில் படித்து, அரசு பொதுத்தேர்வு எழுதினார். இந்நிலையில் நேற்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவி தேர்ச்சி பெற்றார். ஆனால் 334 மதிப்பெண்கள் எடுத்ததால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இது குறித்து தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago