உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கர வித்யாலயா பள்ளியில் மகா பெரியவர் ஜெயந்தி விழா

சங்கர வித்யாலயா பள்ளியில் மகா பெரியவர் ஜெயந்தி விழா

புதுச்சேரி: சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடந்த, மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள காமகோடி பீடத்தின் 68 ஆம் பீடாதிபதியாக விளங்கியவர் மகான் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் 'நடமாடும் தெய்வம்' என்று போற்றி வணங்கப்பெற்றார். பொதுமக்கள் அனைவரும் ஞானம் பெற வேண்டும் என்பதற்காக, ஆன்மிகம் மற்றும் சாஸ்திரத்தை புரியும் வகையில், எளிமையாக உபதேசித்தார். இவரது, 131வது ஜெயந்தி விழா, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில், நேற்று தர்ம சம்ரக்ஷன சமிதி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அங்கு நடந்த பஜனை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மகா பெரியவரின் பாடல்களை பாடி, குரு அருளை பெற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. நிறைவாக, சமிதியின் செயலாளர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை