| ADDED : மார் 31, 2024 04:41 AM
பாகூர் : ஆதிங்கப்பட்டு முத்து மாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, அம்மனுக்கு நேற்று பால்குட அபிேஷகம் நடந்தது. பாகூர் அடுத்த ஆதிங்கப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல அபிஷேக விழா நடந்து வந்த நிலையில், அதன் நிறைவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 11:00 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. முன்னதாக, ஊர் எல்லையில் இருந்து பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து, அங்கு சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு, பால், மஞ்சல், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.