உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்காப்பு கலை பயிற்சி முகாம்

தற்காப்பு கலை பயிற்சி முகாம்

பாகூர்: பனித்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவங்கியது.புதுச்சேரி கல்வி துறை மூலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை (கராத்தே ) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அமர்தேவ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கராத்தே சங்க பொதுச் செயலாளர் வளவன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சங்க இணை செயலாளர் பாலச்சந்தர் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தனர்.பட்டதாரி ஆசிரியர் கவிதா, உடற்கல்வி ஆசிரியர் சவுந்தரராஜன் நோக்கவுரையாற்றினர். பயிற்சியாளர்கள் ரஞ்சித், ராஜலட்சுமி, தமிழரசி ஆகியோர் தற்காப்பு கலையின் சிறப்புகள் குறித்து விளக்கி, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் கராத்தே பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ