| ADDED : ஜூலை 03, 2024 05:59 AM
புதுச்சேரி, : தியாகி அன்சாரி துரைசாமி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.காந்தி வீதி எஸ்.வி. பட்டேல் சாலை சந்திப்பு, அதிதி ஓட்டல் அருகில் உள்ள அவரது சிலைக்கு, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக விழாவிற்கு வந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, விழா ஏற்பாட்டாளர்களிடம் தண்ணீர் கேட்டார். அங்கிருந்த ஊழியர்கள் தண்ணீர் இல்லை என தெரிவித்தனர். இதனை கவனித்த துணை சபாநாயகர் ராஜவேலு, விழாவில் வருவோருக்கு தண்ணீர் கூட வழங்க மாட்டீர்களா என கேட்டுவிட்டு, தனது பாக்கெட்டில் இருந்து ரூ.500 பணம் எடுத்து கொடுத்து, தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வாருங்கள் என கூறினார். அங்கிருந்த அதிகாரிகள் தண்ணீர் உள்ளது என கூறி உடனடியாக தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து அளித்தனர்.ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.