உள்ளூர் செய்திகள்

கொத்தனார் தற்கொலை

காரைக்கால் : வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலிதொழிலாளி இளந்தமரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.காரைக்கால்மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காசிநாதன், 51; கொத்தனார். மது அருந்தும் பழக்கம் உள்ளது.இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் காசிநாதனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் அதிகாலை காசிநாதனை திடீரென காணவில்லை பின்னர் வீட்டு தோட்டத்தில் சென்று பார்த்த போது அவர் இளந்தமரத்தில் துாக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ