உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அரசு அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி, : புதுச்சேரி சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் 139வது மே தினத்தை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் முனுசாமி கொடியேற்றினார். கவுரவ தலைவர் கீதா வாழ்த்தி பேசினார். அமைப்பு செயலாளர் ஹரிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில், ஆஷா ஊழியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் மேகலா கொடியேற்றினார். அமைப்பு செயலாளர்கள் கலைவாணி, சுதா பொருளாளர் வள்ளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் பொருளாளர் பாக்கியவதி கொடியேற்றினார். சம்மேளனத்தின் பொருளாளர் மணிவாணன், சுகாதார உதவியாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர் இளையதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.குயவர்பாளையம் மலேரியா உதவி இயக்குனர் அலுவலகத்தில், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர் ஜெகநாதன் கொடியேற்றினார். பொதுச்செயலாளர் ஜவஹர் வாழ்த்தி பேசினார். துணை தலைவர் கிரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை