மினி மாரத்தான் போட்டி
புதுச்சேரி: லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 'ரெட் ரிப்பன் கிளப்' சார்பில் மாணவர்களுக்கான ரெட் ரன் மினி மாரத்தான் போட்டி கல்லுாரி அளவில் நடந்தது.கல்லுாரி முதல்வர் சுகுணா சுகிர்தபாய் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தமிழரசி வரவேற்றார். இப்போட்டியில் கல்லுாரியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.