நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு
புதுச்சேரி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.பட்ஜெட் கூட்ட தொடர் துவக்க உரையில், வேளாண்துறை வளர்ச்சி தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:கடந்த 5 ஆண்டுகளில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020-21ம் ஆண்டில் நெல் குவிண்டலுக்கு 1868 ரூபாயாக இருந்தது. 2024-25ம் ஆண்டில் குவிண்டாலுக்கு 2300 ரூபாயாக அதிகரித்துள்ளது.நெல் தவிர மீதமுள்ள பயிர்களுக்கு, உற்பத்தி செலவை விட விவசாயிகளுக்கு லாப வரம்பு 50 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.2021- 22ம் ஆண்டு முதல் மத்திய நிதி உதவி திட்டமான வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 440 விவசாயிகள் பயனடையும் வகையில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், நாற்று நடவு இயந்திரங்கள், பவர் வீடர்கள், ரோட்டவேட்டர்கள், பேலர் மற்றும் ட்ரோன்கள் போன்ற பல்வேறு விவசாய இயந்திரங்கள் வாங்கியதற்காக 7.24 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 4.65 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன என கூறினார்.