அமைச்சர் பிறந்தநாள்
வில்லியனுார்: உள்துறை அமைச்சருக்கு மணக்குளர் ரியல் ஏஜென்சி சார்பில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.பிறந்த நாள் விழா கொண்டாடிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலந்துகொண்ட அமைச்சருக்கு, மணக்குளர் ரியல் ஏஜென்சி சார்பில், கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் கமல்ராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் ஒதியம்பட்டு, கொம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், அன்னதானம் வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.