உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு  

வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு  

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், குளம் மற்றும் வாய்க்கால் துார்வாரும் பணியை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு சார்பில், ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் உள்ள சாவடிக்குளம் மற்றும் கிருமாம்பாக்கம், பனித்திட்டு நீர்வரத்து மற்றும் வாய்க்கால்களை, 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் துார்வாரி சுத்தம் செய்திட திட்டமிட்பட்டுள்ளது. இப்பணிக்கான, பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று கிருமாம்பாக்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, குளம் மற்றும் வாய்க்கால் துார்வாரும் பணியை துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலை பொறியாளர் சின்னராசு,  ஒப்பந்ததாரர் வினோத்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ