உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி, ஜூலை 18– பிச்சவீரன்பேட் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பில் சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டு பணிகளை நாராயணசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சவீரன்பேட் (வடக்கு பகுதி) மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் – வடக்கு பிரிவு சார்பில் ரூ. 1.48 கோடி மதிப்பில் உள்புற சிமென்ட் சாலை அமைத்தல், எல் வடிகால் மறு கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இப்பணியினை தொகுதி எம்.எல்.ஏ., நாராயணசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !