நீர்நிலைகள் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
பாகூர்: பாகூர் மற்றும் குருவிநத்தம் கிராமத்தில், 45.90 லட்ச ரூபாய் செலவில், நீர்நிலைகள் துார்வாரும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் சிவன் கோவிலுக்கு பின்னால் உள்ள தாமரை குளத்தை 15.91 லட்ச ரூபாய் செலவிலும், குருவிநத்தம் தாங்கலை 29.99 லட்ச ரூபாய் செலவிலம், துார்வாரி ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம். எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து நீர்நிலைகள் துார்வாரும் பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராம திட்ட ஊழியர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.