| ADDED : ஆக 13, 2024 05:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி பிரீமியர் லீக் போட்டியில் வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி, அபார வெற்றி பெற்றது.துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில், புதுச்சேரி பிரீமியர் லீக் கிரக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த போட்டியில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் மற்றும் வில்லியனுர் மோஹித் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய வில்லியனுர் மோஹித் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு, 200 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர் அமன் கான் 44 பந்துகளில் 83 ரன்களும், மோஹித் காலே 31 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. வில்லியனுர் மோஹித் கிங்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வில்லியனுார் மோஹித் அணியின் அமன்கான் ஆட்டநாயகன் விருது வென்றார்.மாலை 6:45 மணிக்கு தொடங்கிய போட்டியில் காரைக்கால் நைட் ரைடர்ஸ் மற்றும் ஏனாம் ராயல்ஸ் அணிகள் விளையாடின.