கலிதீர்த்தாள்குப்பத்தில் கொசு மருந்து தௌிப்பு
திருபுவனை: மர்ம காய்ச்சல் பரவி வரும் கலிதீர்த்தாள்குப்பத்தில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கொசு மருந்து தௌிக்கப்பட்டது.திருபுவனை தொகுதி, கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார். இதுகுறித்து அங்காளன் எம்.எல்.ஏ., முதல்வரை நேரில் சந்தித்து மர்ம காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், சிறப்பு முகாம் நடத்தவும் கோரிக்கை விடுத்தார்.எம்.எல்.ஏ., கோரிக்கையை தொடர்ந்த முதல்கட்டமாக மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க, ஆயுஷ் துறையின் மூலமாக வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கலிதீர்த்தாள்குப்பம் மற்றும் திருபுவுனையில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு 'கபசுர குடிநீர்' வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொசுக்களால் நோய் பரவாமல் தடுக்க மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் விசைத் தெளிப்பான்மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டது.