உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அன்னையர் தினம்: முதல்வர் வாழ்த்து

அன்னையர் தினம்: முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி: தாயின் மன வலிமை, அசைக்க முடியாத அன்பு, கருணை, நெகிழ்ச்சி ஆகிய அனைத்தும், அவளை சக்தியின் மறு உருவமாக கொண்டாட வைக்கிறது என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி:உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேசும் வார்த்தையான 'அம்மா' என்பது தாய்மையின் அம்சம். நிபந்தனையற்ற அன்பால் இதயத்தின் அடியாழத்திலிருந்து வெளிப்படும் இணையில்லா மொழி. தாயின் மனவலிமை, அசைக்க முடியாத அன்பு, கருணை, நெகிழ்ச்சி இவை அனைத்தும் அவளை சக்தியின் மறுவுருவமாகக் கொண்டாட வைக்கிறது.தாயின் அன்பிற்கு பாத்திரமான எந்த மனிதனும் ஏழையல்ல என்கிறோம். தனது வாழ்நாள் முழுதும், ஆதரவு, ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி நம்மை ஆளாக்க தாய் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதையும் ஈடாகத் திருப்பிச் செலுத்த முடியாது.அவர்களின் தியாகத்திற்கு இந்த அன்னையர் தினத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் நாம் நமது நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டவர்கள். தாய்க்குலத்தின் பெருமையை உணர்ந்து, அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நினைவூட்டும் இந்நாளில், தாய்மார்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை