உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்

மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்

புதுச்சேரி: இந்தி திணிப்பை முதல்வர் ரங்கசாமி ஆதரிக்கிறாரா என வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில்:புதிய மதுபான தொழிற்சாலை அனுமதியை காங்., கட்சி எதிர்க்கிறது. ஏற்கனவே உள்ள ரெஸ்டோ பார்களால் அரசுக்கு வருமானம் கிடையாது. புதுச்சேரியில் இயங்கி வரும் மது தொழிற்சாலைகளை அரசு ஏற்று நடத்தினால் வருவாய் கிடைக்கும். நிதி நெருக்கடி குறையும்.மதுபார்களை அரசே ஏற்றால் காங்., ஆதரிக்கும்.மும்மொழி கொள்கையால் தமிழ் மொழியை புதைகுழியில் தள்ளிவிட்டு, முதல்வர் ரங்கசாமி உலக தமிழ் மாநாடு நடத்தபோவதாக அறிவித்துள்ளார். இந்தி திணிப்பை முதல்வர் ஆதரிக்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இந்தி ஆசிரியர்கள் இல்லாததால் தற்போது இந்தி கற்றுக்கொடுப்பதில்லை. ஆசிரியர் நியமித்ததும் இந்தி கட்டாயமாகும் நிலை ஏற்படும். லோக்சபா தேர்தலிலில் ஆளும் அரசு மக்களின் நம்பிக்கை இழந்து புறக்கணிக்கப்பட்டதால், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு குரல் கேட்கவில்லை

புதிய மதுபான தொழிற்சாலை அனுமதி தொடர்பாக சட்டசபையில் காங்.,-தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என வைத்திலிங்கம் எம்.பி.,யிடம் கேள்வி எழுப்பியபோது, மது தொழிற்சாலை அனுமதியை காங்., எதிர்க்கிறது. காங்., கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதால் எதிர்ப்பு குரல் வெளியே கேட்கவில்லை என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை