உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /   நாளை கிரியா யோக தியானம்

  நாளை கிரியா யோக தியானம்

புதுச்சேரி: யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சன்னியாசி சார்பில் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் தியான வகுப்புகள் புதுச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நாளை (15ம் தேதி) சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு, புதுச்சேரி, திருவள்ளுவர் நகர், சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஓட்டல் சற்குருவில் பாபாஜி வகுத்து வந்த 'கிரியா யோக தியானம்' தலைப்பில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா, மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி உரையாற்றுகிறார். மறுநாள் (16ம் தேதி) காலை 8:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகரில் அமைந்துள்ள ஜோதி வாசம் இடத்தில், சன்னியாசிகள் நடத்தும் ஒருநாள் தியான வகுப்பு நடக்கிறது. அதில், சத்சங்கம், தியானம், யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா, தியான உத்திகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பங்கேற்க அனுமதி இலவசம். வழிகாட்டுதல்களுக்கு 90030 43169, 96000 91653 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி