அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் இசை சிகிச்சை அறிமுகம்
புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில், கீமோதெரபியின் பக்க விளைவுகளை குறைக்க, இசை சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது.சென்னையில் உள்ள அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு மேம்படுத்தப்பட்ட, நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி கொடுப்பதன் மூலம், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் மற்றும் மனதளவில், பாதிக்காத வகையில், அப்போலோ புரோட்டான் சென்டரில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில், தெற்காசியாவில் முதன் முறையாக, இசை சிகிச்சையை அறிமுகம் செய்துள்ளது.அப்போலோ மருத்துவமனை செயலாக்க துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, கூறியதாவது:மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து, அவர்களை நன்கு பராமரித்து வருகிறோம். 'மியூசிக் ஸ்டடி' என்பது, சிகிச்சை பெறும் நபர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இசை உலகளாவிய மொழியுடன், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில், சிகிச்சை அளிப்பதாகும்.எக்கோ கேர் அமைப்பானது, நோயாளிகளின் இடைவினை செயல்பாடுகளில் இருந்து தொடர்ந்து கற்று கொள்கிற பன்முக அமைப்பாகும். அதனின் நரம்பணு வலையமைப்புகளை பயன்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகளை செய்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான புற்று நோய் சிகிச்சையோடு, இசையை ஒருங்கிணைத்து அளிக்கப்படும் சிகிச்சையானது, கிமோதெரபி நோயாளிகளின் மத்தியில் மன கலக்கத்தையும், மன அழுத்தத்தையும் மற்றும் வலி உணர்வையும் குறைப்பதற்கு ஒரு தனிச்சிறப்பான உத்தியை பயன்படுத்தி உள்ளோம். மருத்துவ நிபுணர் குழுவினர், இந்த இசை சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் தெரிவிததார்.