உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா நயினார் நாகேந்திரன் கும்பிடு

அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா நயினார் நாகேந்திரன் கும்பிடு

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னரை தமிழக பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.தமிழக பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் 12:00 மணியளவில் ராஜ்நிவாஸ் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடந்தது.கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்தபோது, அவரிடம் இச்சந்திப்பு பற்றி கேட்டதற்கு, மரியாதை நிமித்தமாக என்றார். தி.மு.க., தான் எதிரிக்கட்சி என்று பழனிசாமி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, அது நல்ல கருத்து என்றார்.இது அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணிக்கு அச்சாரமா என்று கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்டபடி அங்கிருந்து புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி