உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கு

தேசிய கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுச்சேரி: தேசிய கண்தான இருவார விழாயையொட்டி, இந்திரகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டம் இணைந்து கண்தானம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின.இந்திரகாந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிழ்ச்சியில், கண் மருத்துவர் மலர்மொழி வரவேற்றார். மருத்துவ கண்காணிப் பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். கண் பிரிவு துறை தலைவர் தணிகாசலம் விளக்கவுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஷா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்க்கும் அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்று பேசினர்.தொடர்ந்து, கண் தானம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. கண் மருத்துவர் வர்ஷினி கருத்துரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் குமார், உறுப்பு தானம் பற்றி விளக்கம் அளித்தார். தொடர்ந்து, கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மருத்துவர் கவிதா, பிரணீத்தா, ஆரோக்கியம் ஜான் பாஸ்கோ, தேசிய சுகாதார இயக்கத்தில் பணிபுரியும் 125 ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் அர்ச்சனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை